வெள்ளை புடவையில் பெண்கள் பொங்கல் வழிபாடு
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே, பொருளாதார வேறுபாடுகள் எதுவும் இன்றி, கிராம பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற புடவையை அணிந்து பொங்கல் பண்டிகையை பக்தியுடன் கொண்டாடினர்.
வளையராதினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் தங்க ஆபரணங்களை தவிர்த்து விரதம் இருந்து, வெள்ளை புடவை உடுத்தி பொங்கல் வைத்து வழிபாடு செய்வதை பாரம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.
அந்த வழக்கின்படி, இவ்வாண்டும் பெண்கள் தங்கள் குலதெய்வமான “பெருமாள் பொன்னழகி” அம்மன் கோயிலுக்கு பொங்கல் பானைகளைத் தலையில் சுமந்தபடி வந்து, சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வழிபாட்டை மேற்கொண்டனர்.