மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து
உழவுத் தொழிலின் உறுதியான துணையாகவும், விவசாயத்தின் உயிர்ப்பான அடையாளமாகவும் விளங்கும் மாடுகளை மரியாதையுடன் போற்றும் மாட்டுப்பொங்கல் திருநாளில், தமிழக மக்களனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயற்கையோடு இணைந்த வேளாண்மை மரபை தலைமுறைகளாக பாதுகாத்து வரும் விவசாயிகளும், அவர்களின் உழைப்பிற்கு தோளோடு தோள் நின்று துணைபுரியும் கால்நடைகளும், இந்த நன்னாளில் மேலும் வளம்பெற்று செழிக்கவும், அனைத்து மக்களுக்கும் நலம், வளம் மற்றும் மகிழ்ச்சி பெருகவும் இறைவனை வேண்டுகிறேன்.