உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்
புதிய எண்ணங்களும், புதிய தொடக்கங்களும் ஒன்றிணைந்து வாழ்க்கையில் இனிய மாற்றங்களை உருவாக்கும் இந்த தைத் திருநாளில், உலகின் பல மூலைகளிலும் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் என் இதயப்பூர்வமான தைப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் இயங்க பயிர்களை உற்பத்தி செய்து உழைக்கும் விவசாயப் பெருமக்களின் உழைப்பை போற்றும் நாளாகவும், உயிர்களுக்கு உயிர் அளிக்கும் ஒளியை வழங்கும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாளாகவும், நம் முன்னோர்கள் தலைமுறைகளாகக் கொண்டாடி வரும் விழா இதுவாகும். “தை பிறந்தால் வழி திறக்கும்” என்ற நம்பிக்கையின் அடிப்படையில், அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, வளம் மற்றும் நன்மை பெருக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.