உலகத் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடும் பொங்கல் திருநாள்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை, இன்று உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழ் மக்களால் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டாடப்படுகிறது.
உயிர்கள் அனைத்திற்கும், வேளாண்மைக்கும் அடிப்படையாகத் திகழும் சூரிய தேவனுக்கு நன்றி செலுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மக்கள் அனைவரும் புதிய ஆடைகளை அணிந்து, இல்லங்களின் வாசல்களில் அழகிய கோலங்களை வரைந்து, புதிய மண்பானையில் பொங்கல் தயாரித்து வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள்.
அதேபோல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களிலும் அதிகாலை நேரத்திலிருந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.