தொடர் திமுக மாநாடுகள் – செலவுச் சுமையால் கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள்
வரும் காலகட்டத்தில் திமுக சார்பில் தொடர்ந்து மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான செலவுகளை ஏற்க வேண்டிய நிலை கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூரில் வரும் 26ஆம் தேதி, கனிமொழி எம்.பி. தலைமையில் மகளிர் மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 8ஆம் தேதி திருப்பூரில் மற்றொரு திமுக மாநாடு நடத்தப்பட உள்ளது.
இதனுடன், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் மற்றும் தெற்கு மண்டல பகுதிகளிலும் அடுத்தடுத்த மாநாடுகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, திமுக அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் செலவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.