திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒன்றிணைய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் கருத்து
திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியே ஒரே வலுவான மாற்று சக்தி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தேர்தல் காலம் நெருங்கும் போது, போட்டியின் தன்மை இருமுனைதானா அல்லது பலமுனையா என்பது தெளிவாகும் என்றும் அவர் கூறினார்.
பாஜக தமிழுக்கு எதிரான கட்சி என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழில் வாழ்த்துச் செய்திகளை வழங்கிய பிரதமரின் நடவடிக்கை அந்த விமர்சனங்களுக்கு உரிய பதிலாக அமைந்துள்ளது என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.
திமுகவை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே முடியும் என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
சென்னையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, NDA கூட்டணி அரசியல் களத்தில் வேகமாக முன்னேறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல், ஒரே திசையில் ஒன்று திரள வேண்டும்; அவை தனித்தனியாகப் பிரிந்து வீணாகிவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், திமுகவை வீழ்த்தும் முயற்சியில் நடிகர் விஜய்க்கும் முக்கிய பங்கு இருப்பதாகக் கூறிய தமிழிசை, அந்த பொறுப்பை அவர் உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.