சென்னை தாம்பரம் புறநகரில் தனியார் கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலம்
சென்னை தாம்பரம் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில், மாணவர்கள் மற்றும் மாணவிகள் பாரம்பரிய ஆடைகள் அணிந்து, பொங்கல் சமைத்து வழிபாடு செய்தனர்.
உழவர் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பொங்கல் விழாக்கள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தாம்பரம் புறநகரில் அமைந்துள்ள SIVET கல்லூரியில் சிறப்பாக பொங்கல் விழா நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில், மாணவ, மாணவிகள் வேட்டி, சேலை போன்ற பாரம்பரிய உடைகளில் கலந்து கொண்டு, முளைப்பாரியுடன் வருகை தந்து, புதிய மண்பானையில் பொங்கல் வைத்து இறைவழிபாடு செய்தனர். தொடர்ந்து கபடி, மெதுவான சைக்கிள் போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.