பொங்கல் பண்டிகையையொட்டி நாட்டுமக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்துச் செய்தி
உழைப்பாளர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல் திருநாள் நாட்டின் செழிப்பையும் வளமையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குவதோடு, இந்திய வேளாண் பாரம்பரியத்தின் ஒற்றுமை உணர்வை எடுத்துரைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பண்டிகை, இந்தியாவின் பல்வேறு பண்பாடுகள் மற்றும் கலாச்சார மரபுகளை ஒருங்கிணைக்கும் தன்மையைக் கொண்டதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு நாட்டிற்கு உணவளித்து வரும் விவசாயிகளை நினைவுகூர்ந்து நன்றியுடன் பாராட்டும் தருணமாக இந்தப் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.