கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் வசதி இன்று முதல் தொடங்கியது
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் QR கோடு மூலம் சுற்றுலாப்பயணிகள் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு தினமும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருவதை கருத்தில் கொண்டு, குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம் போன்ற இடங்களில் நுழைவு கட்டணத்தை நேரில் பெறுவது போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி வந்தது.
இதனைத் தவிர்க்க, தற்போது அனைத்து முக்கிய சுற்றுலா இடங்களிலும் 300 மீட்டர் இடைவெளியில் QR கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலாப்பயணிகள் விரைவாக, எளிதாக கட்டணம் செலுத்தக்கூடியதாக மாற்றப்பட்டுள்ளது.