சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்
சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
1970களில் சென்னையில் இயக்கப்பட்ட டபுள் டக்கர் பேருந்துகள், நகரத்தின் ஒரு அடையாளமாக இருந்தன. தாம்பரம் முதல் உயர்நீதிமன்றம் வரை ஓடிய அந்த பேருந்துகள் பொதுமக்களிடையே பிரபலமாக இருந்த போதும், பராமரிப்பு செலவுகள் அதிகமாக இருப்பதால் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை செயல்பட தொடங்கியுள்ளது.
சென்னை நந்தம்பாக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் பேருந்து சேவையை தொடங்கி வைத்து, அதன் செயல்பாட்டை நேரில் பார்வையிட்டார். இப்பேருந்து சேவை சென்னை அடையாறு முதல் மாமல்லபுரம் வரை மின்சார டபுள் டக்கர் பேருந்துகளாக இயக்கப்படும்.