சென்னை புத்தகக் காட்சியில் தினசரி நூல் ஆசிரியர் கலந்துரையாடல் – விஜயபாரதம் அரங்கில் ஏற்பாடு
சென்னை புத்தகக் காட்சியில் உள்ள விஜயபாரதம் அரங்கில், தினமும் நூல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 49வது புத்தகக் கண்காட்சியில், F54 என்ற அரங்கில் “விஜயபாரதம்” பிரசுரம் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம் சார்ந்த நூல்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 9 முதல் 18 வரை, மாலை 6 மணிக்கு “நூல் ஆசிரியர்களுடன் உரையாடல்” என்ற தலைப்பில் தினமும் ஒரு நிகழ்ச்சி நடைபெறும் என ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.