சமத்துவ பொங்கல் பெயரில் இந்துக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
சமத்துவ பொங்கல் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தும் விழாக்கள், இந்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக உள்ளது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரத நாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக இணைந்தவை தான் நமது பண்டிகைகள் எனக் கூறினார். அத்தகைய பாரம்பரியத்தில் இல்லாத “சமத்துவ பொங்கல்” என்ற புதிய கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கி கொண்டாடி வருவதாகவும் விமர்சனம் செய்தார்.
மேலும், சமத்துவ பொங்கல் என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்கள், இந்து சமூகத்தை தவறாக வழிநடத்தும் முயற்சி எனக் குறிப்பிட்ட வானதி சீனிவாசன், இந்து பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வழக்கமாக வாழ்த்து தெரிவிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அத்துடன், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு பின்னர் மாநிலத்தில் தேர்தல் நடவடிக்கைகள் வேகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.