பொங்கலை முன்னிட்டு ‘மோடி பொங்கல்’ கொண்டாட்டம் – பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு
பொங்கல் திருநாளை முன்னிட்டு நெல்லை கண்ணன் குளம் பகுதியில் நடத்தப்பட்ட ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் பாஜக மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொங்கல் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்ணன் குளம் பகுதியில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில செயலாளர் அஸ்வதாமன், மாநில இளைஞர் அணியின் துணைத் தலைவர் அசோக் உள்ளிட்ட பல்வேறு நிலை நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
விழாவின் போது, பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து 301 மண் பானைகளில் பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரித்து, அதை பொதுமக்களுக்கு வழங்கினர். தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் இந்தப் பொங்கல் கொண்டாட்டம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவனம் பெற்றது.