சென்னையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் பிடிபட்டார்
சென்னை மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒக்கியம் துரைப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கண்ணகிநகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சரண்யா என்ற பெண்ணை போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 1 கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், கடந்த பல மாதங்களாக அவர் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும், ஏற்கனவே அவர்மீது 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
மேலும், சரண்யா காவல்துறை பதிவுகளில் B-தர சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.