அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் கஞ்சா வழக்கில் சிக்கிய பெண் – அண்ணாமலை கேள்விகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் பெண் கஞ்சா வியாபாரி ஒருவருடன் எடுத்துக் கொண்டதாக கூறப்படும் புகைப்படத்தை வெளியிட்டு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்ட பதிவில், அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றச்சாட்டில் தொடர்புடைய ஞானசேகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாக பல்வேறு விளக்கங்களை அளித்து தப்பிக்க முயன்ற அமைச்சர், தற்போது கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட பெண்ணுடன் உள்ள புகைப்படத்திற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தப் பெண், கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த திமுக துணைச் செயலாளராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர்கள் வரை நெருங்கிய தொடர்பில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் திமுகவுடன் நெருக்கமாக இருப்பது ஆச்சரியமல்ல என்றும் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.