கிராமத்தில் உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் விழா – மகிழ்ச்சியுடன் பங்கேற்ற வெளிநாட்டு விருந்தினர்கள்
பொங்கல் பண்டிகை நெருங்கியதை ஒட்டி, தென்காசி அருகேயுள்ள கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கொண்டாட்டங்களில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் விழாக்கோலம் காணப்படும் நிலையில், தென்காசி மாவட்டம் முத்துமாலைபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழா அனைவரையும் கவரும் வகையில் நடைபெற்றது.
தோரணமலை முருகன் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இந்த விழாவில் ஸ்பெயின் மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு விருந்தினர்களும் கலந்து கொண்டு, கிராம மக்களுடன் இணைந்து ஆடி, பாடி, தமிழர் பண்பாட்டை அனுபவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.