திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களை வரவேற்க அரசு பள்ளி மாணவிகள் கட்டாயம் – சர்ச்சை
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுகவைச் சேர்ந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை வரவேற்க அரசுப் பள்ளி மாணவிகள் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலாறு தடுப்பணை மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நீர்வளத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் வருகையின் போது மலர்களைத் தூவி வரவேற்க, அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் பள்ளிச் சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும் என நிர்வாக அதிகாரிகள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் செயல் குழந்தைகளை அரசியல் நிகழ்வுகளில் பயன்படுத்தும் நடவடிக்கையாக இருப்பதாகக் கூறி, பல்வேறு தரப்பினரும் அதிகாரிகளின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்