மீனவர்கள் கடற்பயணம் மேற்கொள்ள வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென் தமிழக கடற்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொண்டு, நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலில் இறங்க வேண்டாம் என மீன்வளத் துறையினர் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து, மீனவர்கள் தங்களின் படகுகளை கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் கடலோர பகுதிகள் முழுவதும் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவித்ததால், அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, சுமார் 5 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரையிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.