“சென்சார் போர்டு பிரச்னையில் பாஜக பெயரை இழுப்பதா?” – தமிழிசை கடும் விமர்சனம்
தமிழகத்தில் செயல்படும் திரையரங்குகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு ஏற்பாடு செய்த பொங்கல் விழா, சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, சென்சார் போர்டு தொடர்பான விவகாரத்தில் பாஜகவை சம்பந்தப்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலிவான அரசியல் செய்து வருகிறார் என்றும், கலை மற்றும் கலாச்சாரத் துறையை அடக்கி ஒடுக்கியவர்கள் திமுகவும் காங்கிரசுமே என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தொலைக்காட்சி ஊடக விவாத நிகழ்ச்சியின் போது பாஜக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.