அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ பயணக் கதை

Date:

அசாதாரண சூழ்நிலையில் 670 கிலோமீட்டர் சாலைப் பயணம் – ஜெய்சங்கரின் அபூர்வ பயணக் கதை

அமெரிக்காவில் அரசு நிர்வாகம் நிதியின்மை காரணமாக செயலிழந்திருந்த நேரத்தில், நியூயார்க் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரின் பயணம், அபூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நேரத்தில் நடந்தது என்ன என்பதே தற்போது கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் அரசு முடக்கம், கடுமையான பனிப்பொழிவு, விமான சேவைகள் நிறுத்தம் என பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், 670 கிலோமீட்டர் தூரத்தை காரில் பயணித்துள்ளார் ஜெய்சங்கர். அதுவும் மிக அரிதான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்தப் பயணம் நடைபெற்றதாக, Supervisory Special Agent காப்ரியல் மாசியாஸ் தெரிவித்துள்ளார்.

2025 டிசம்பர் 30 அன்று அவர் வெளியிட்ட கட்டுரையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் அசாதாரணமான பயண அனுபவமும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு திட்டங்களும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. டிரம்ப் நிர்வாக காலத்தில், பட்ஜெட் மசோதாக்கள் உரிய முறையில் நிறைவேறாததால், அமெரிக்க அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலை ஏற்பட்டது. அத்தியாவசிய சேவைகள் தவிர, பெரும்பாலான அரசு அமைப்புகள் செயல்பட முடியாத சூழ்நிலை நிலவியது.

நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி7 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கனடாவில் இருந்த ஜெய்சங்கர், அதன் பின்னர் நியூயார்க் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் கடுமையான குளிர் காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் சாலை வழியாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தப் பயணத்தை பாதுகாப்பாக நிறைவேற்ற “mission-defining challenge” என்ற சிறப்பு திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் வகுத்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் முக்கியமான ராஜதந்திர சந்திப்பு நடைபெற இருந்ததால், கனடா எல்லையில் உள்ள லூயிஸ்டன்–குயின்ஸ்டன் பாலத்தில் ஜெய்சங்கரை அமெரிக்க அதிகாரிகள் வரவேற்று, மன்ஹாட்டன் நோக்கி ஏழு மணி நேர பயணத்தை தொடங்கினர்.

இந்தப் பணிக்காக Diplomatic Security Service, நியூயார்க் பீல்ட் ஆபீஸ் மற்றும் பஃபலோ ரெசிடென்ட் ஆபீஸ் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து, துணிச்சலான மற்றும் துல்லியமான செயல் திட்டத்தை உருவாக்கினர்.

ஜெய்சங்கர் கவசம் கொண்ட வாகனத்தில் பயணிக்க, ஓட்டுநர்கள் மாறி மாறி வாகனத்தை இயக்கினர். தடையின்றி, இடைநிறுத்தம் இல்லாமல் பயணம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாதுகாப்பு குழு உறுதி செய்தது. 670 கிலோமீட்டர் முழுவதும் பாதுகாப்பு தொடர்ந்த நிலையில், இறுதியாக நியூயார்க் சென்றடைந்த ஜெய்சங்கர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை சந்தித்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

2025 அக்டோபர் 1 முதல் நவம்பர் 13 வரை, சுமார் 43 நாட்கள் அமெரிக்காவில் அரசு முடக்கம் நீடித்த சூழலில், ஜெய்சங்கரின் இந்தப் பயணத் திட்டம் மிகுந்த புத்திசாலித்தனத்துடனும், தைரியத்துடனும் செயல்படுத்தப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தப் பயணம் மிகவும் சவாலானதாக இருந்த போதிலும், அந்த ஸ்பெஷல் ஏஜெண்ட் எழுதிய கட்டுரை குறித்தோ, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை குறித்தோ இந்திய அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கப்படவில்லை. அதனை உறுதிப்படுத்தவும் மறுக்கவும் இந்திய தரப்பு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு

திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு திமுக தனது...

மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா விளக்கம்

மோடி ட்ரம்பை புறக்கணித்தாரா? – அமெரிக்க அமைச்சரின் தவறான குற்றச்சாட்டுக்கு இந்தியா...

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம்

மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம் சரக்கு மற்றும் போக்குவரத்து...

ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி விசாரணை வேண்டும்

ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி...