பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான உலக சாதனை முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி உலக சாதனை முயற்சி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று, பெண் பாலினத்தை சுட்டிக்காட்டும் குறியீட்டு வடிவத்தை அமைத்து புதிய உலக சாதனையை படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பெண் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் அனைவரும் இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர், இந்த சாதனை முயற்சியை அங்கீகரித்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.