மதுரையில் ஜனவரி 23-ம் தேதி என்டிஏ பொதுக்கூட்டம் – பிரதமர் மோடி பங்கேற்பு
பிரதமர் மோடி தலைமையில் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மதுரையில் உள்ள அம்மா அரங்கில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில், 23-ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
தொகுதி பங்கீடுகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் அண்மையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.