திரையரங்க முன்பு பேனர் அமைத்த விவகாரம் – தவெக, திமுக இடையே மோதல்
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியில் உள்ள திரையரங்கின் அருகே பேனர் அமைப்பதைச் சுற்றி தவெக நிர்வாகிகள் மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, துரிஞ்சிப்பட்டி மற்றும் பொம்மிடி பகுதிகளில் பேனர்கள் நிறுவும் பணியில் தவெக ஆதரவாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், தவெக நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதல் கைகலப்பாக மாறிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தவெக அமைப்பின் நிர்வாகி செல்வம் காயமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.