மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு தேர்தல் வாக்குகளாக மாறுமா என்பது உறுதியில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பு இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்களிடையே நல்ல செல்வாக்கு காணப்படுவதாகவும் கூறினார். இருப்பினும், அந்த ஆதரவு தேர்தலில் வாக்குகளாக பிரதிபலிக்குமா என்பது கேள்விக்குறியே என அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்தவிதமான பதற்றமும் இல்லை என்றும், தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கினார்.
காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பல ஆண்டுகளாக போதுமான அளவில் வலுப்படுத்தப்படாமல் இருப்பதாகவும், அதனை மேம்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார்