தலையை மறைத்து திமுக அரசுக்கு எதிராக பெண்கள் வித்தியாசமான எதிர்ப்பு போராட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர்ச்சியான போராட்டத்தின் மூன்றாவது நாளில், ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது தலைகளை மறைத்துக் கொண்டு புதிய வகை போராட்டத்தை மேற்கொண்டனர்.
குறைந்தபட்ச சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைமையகங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய பகுதியில், இந்த இயக்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் 500-க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ள நிலையில், மூன்றாம் நாள் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், தலையில் முக்காடு போர்த்திக் கொண்டு திமுக ஆட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.