மதுரையில் ஆண்டு முதலாவது ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக!
மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போட்டிகள் நடைபெறும் பாரம்பரியத்தை தொடர்ந்தே, இந்த ஆண்டு முதன்முறையாக அலங்காநல்லூர் அருகே கீழக்கரை நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் தனியார் அமைப்பு மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
மாநில அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் 750 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளை வீரர்கள் திறமையாக கட்டுப்படுத்தினர்.
வெற்றி பெற்ற காளை உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, குக்கர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், மதுரையில் உலக தொழிலதிபர் மாநாடு நடைபெறும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலதிபர்கள் குடும்பத்தோடு கலந்து போட்டியை நேரில் அனுபவித்தனர். தமிழ் பரம்பரிய உடை வேஷ்டி அணிந்து, ஒயிலாட்ட கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தனர்.