பதவி நீக்க மசோதாவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் சேர்க்கப்படுமா? – சட்ட ஆணையத்திடம் கூட்டுக் குழு விளக்கம் கேள்வி
தீவிர குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குள் ஜாமீன் பெறத் தவறினால், பிரதமர், முதலமைச்சர், மத்திய மற்றும் மாநில அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கும் வகையிலான மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவை மேலும் விரிவாக ஆய்வு செய்வதற்காக, அது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இந்த பதவி நீக்க மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவர இயலுமா? என்ற கேள்வியை நாடாளுமன்ற கூட்டுக் குழு, சட்ட ஆணையத்திடம் முன்வைத்துள்ளது.
மேலும், இம்மசோதா தொடர்பாக சட்ட வல்லுநர்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.