சணல் பொருட்களில் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
சணல் பொருட்களில் நடைபெறும் கலப்படத்தை தடுக்கும் நோக்கில், சென்னை வடபழனியில் மத்திய ஜவுளித் துறை சார்பில் “சணல் மார்க் இந்தியா” திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்திற்கு உட்பட்ட ஜவுளி குழுவின் இணை இயக்குநர் முரளிதரன், தமிழ்நாடு கைத்தறித் துறை துணை இயக்குநர் ரகுநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முரளிதரன், உற்பத்தி செய்யப்படும் சணல் பொருட்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் சணல் நார் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, அவற்றுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.