திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தல் – 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
சேலம் கோட்டை மைதானத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கங்களின் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திமுக கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதி எண் 313-ஐ உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சேலம் மாநகரப் பகுதியில் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் முன்னதாக நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, கோட்டை மைதானத்தில் 500-க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு, இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் தீவிரமடையக்கூடும் என்பதால், சாலை மறியல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.