தமிழக ஆட்சியில் உரிய பங்கு வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உறுதி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுவாக்குவதற்காக, ஆட்சியில் உரிய பங்கு கோருவது தவிர்க்க முடியாதது என காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமான நிலையில் இருந்து வருகிறது என்று கூறினார்.
இந்த நிலையை மாற்ற, ஆட்சியில் பங்கேற்பு அவசியம் என்றும்,
கட்சியை மீண்டும் உறுதியாக கட்டியெழுப்ப வேண்டிய காலம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த நோக்கத்திற்காகத்தான் கூடுதல் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கோரி வருகிறோம் என அவர் விளக்கினார்.
காங்கிரஸ் கட்சியை உண்மையாக வலுப்படுத்த, அதிகமான தொகுதிகளில் போட்டியிட வேண்டியது கட்டாயம் என்றும் அவர் கூறினார்.
மேலும்,
மக்கள் இனி விஜய்யை வெறும் நடிகராக மட்டும் பார்க்கவில்லை,
அவர் தற்போது ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறார் என்றும் பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டார்.
தொண்டர்கள் தங்களது கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கலாம் என்றும்,
கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகளை காங்கிரஸ் தலைமையே எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
விஜய்யை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என கூறிய அவர்,
அந்த சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது என்றும் விளக்கமளித்தார்.