100 நாள் வேலை திட்ட வாக்குறுதி எங்கே? – திமுக மற்றும் அதன் கூட்டணியிடம் அண்ணாமலை கேள்வி
100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட தேர்தல் உறுதிமொழிகள் என்ன ஆனது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 150 நாட்கள் வேலை வழங்குவோம் என்று திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதியளித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கிற சக்தி உங்கள் கூட்டணிக்குள் யார்? என்பதை தமிழக மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஏன் தப்பித்துச் செல்கிறீர்கள்? இந்த மக்களையும் குடிகாரர்கள் என அவமதிக்கப் போகிறீர்களா? என்றும் அண்ணாமலை வினவியுள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக கேள்விகளை எதிர்கொள்ளாமல் ஓடுவதையே நீங்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளீர்கள். ஆனால், உங்களைப் போல அல்லாமல், உங்கள் போன்ற விஷம சக்திகள் பரப்பிய குற்றச்சாட்டுகளுக்கு நான் நேரடியாக பதிலளித்துள்ளேன்; ஒருபோதும் ஓடி மறையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.