படுகர் இன மக்களுடன் இணைந்து ஹெத்தையம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வழிபாடு
நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் படுகர் சமூகத்தின் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவில், மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
கோத்தகிரி அருகே உள்ள பேரகணி கிராமத்தில் அமைந்துள்ள ஹெத்தையம்மன் ஆலயத்தில், படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக இந்த திருவிழாவை நடத்தி வருகின்றனர்.
இந்த விழாவில் பங்கேற்க கோத்தகிரிக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு, அப்பகுதி மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பேரகணிக்கு சென்ற அமைச்சர், படுகர் சமூக மக்களுடன் இணைந்து ஹெத்தையம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தார்.