செல்போன் திருடனை கன்னத்தில் அறைந்த முதியவர் – வைரலாகும் அதிரடி காட்சி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில், தனது கைபேசியை திருட முயன்ற நபரை முதியவர் தைரியமாக தாக்கிய சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வேடசந்தூர் அருகே உள்ள ஆத்துமேடு பேருந்து நிலையத்தில், ஒரு முதியவர் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அவரை கவனித்து வந்த ஒருவர், முதியவரின் கைபேசியை எடுத்து, தனது வேட்டிக்குள் மறைத்துக் கொண்டார்.
இதனை உடனே உணர்ந்த முதியவர், அந்த நபரின் கன்னத்தில் பலமாக அறைந்தார். தொடர்ந்து அடிகள் விழுந்ததால் வலியடைந்த அந்த நபர், திருடிய கைபேசியை திருப்பிக் கொடுத்து, அங்கிருந்து தப்பி ஓடினார்.