சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மோடி பொங்கல் விழா உற்சாகம்
திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடி பொங்கல் விழாவை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலத்திலும் பாரதிய ஜனதா கட்சியினர் மோடி பொங்கலை சிறப்பாகக் கொண்டாடினர்.
பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழகமெங்கும் மக்கள் விழாக்கோலத்தில் கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, சேலம் அழகாபுரம் மண்டல பாஜக சார்பில் இன்று பொங்கல் விழா நடத்தப்பட்டது. இதில், பாஜக மகளிரணி நிர்வாகிகள் உற்சாகத்துடன் பொங்கல் தயாரித்து கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.