“தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர் ரகுபதி உடனே நீக்கப்பட வேண்டும்” – முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதுபோன்று அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்திருப்பது, நேரடியான நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், சுடுகாட்டை கோயிலுடனும், புனிதமான தீபத்தூணுடனும் ஒப்பிடுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும், இது பொதுமக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் எண்ணத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும், ஏ.என்.எஸ். பிரசாத் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்