அரசு நிர்ணய விலையை விட குறைவாக கரும்பு வாங்கும் அதிகாரிகள்
கரும்பு வாங்கும் பணியில் அரசு நிர்ணயித்த தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என, கூட்டுறவுத்துறை அலுவலர்களிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள சூழலில், விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை வாங்கி, ஒவ்வொரு கரும்புக்கும் 38 ரூபாய் வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பல்வேறு பகுதிகளில் கரும்பு கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரும்பை அரசு அறிவித்த விலையை விட குறைந்த தொகைக்கு அதிகாரிகள் வாங்குவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களுக்கு பொருளாதார பாதிப்பு ஏற்படுவதாகக் கூறும் விவசாயிகள், அரசு நிர்ணயித்த விலையிலேயே கரும்பை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.