இரண்டு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் தமிழ்நாடு பாய்மரப் படகு பயிற்சி மையம்
சென்னையில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ்நாடு பாய்மரப் படகு பயிற்சி மையம், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் 11வது சர்வதேச இளையோர் பாய்மரப் படகு போட்டியின் தொடக்க விழா, சென்னை துறைமுகப் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் சத்யபிரதா சாகு, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பாய்மரப் படகு விளையாட்டு சங்கம் மற்றும் இந்திய கடலோர காவல் படை ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.