தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்படுவதற்கு பாஜகதான் முக்கிய காரணம் – அண்ணாமலை பேச்சு
தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியே முக்கிய பங்காற்றியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்ற “நம்ம ஊரு மோடி” பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழர் பெருமையை வெளிப்படுத்தும் பொங்கல் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட வேண்டும் என கூறினார்.
மேலும், பழைய நடைமுறைகள் காலத்திற்கேற்ப விலகி, புதிய மாற்றங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜல்லிக்கட்டின் அடிப்படையான காளை வளர்ப்பை மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களை முதலமைச்சர் ஸ்டாலின் உரிய முறையில் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தினார்.