அமைச்சர் மூர்த்தியை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கடும் எதிர்ப்பு – அவனியாபுரத்தில் பரபரப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம விழா குழுவே நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமைச்சர் மூர்த்தியை கிராம மக்கள் சுற்றிவளைத்ததால் அந்தப் பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி பங்கேற்றிருந்தார். அந்த நேரத்தில், அங்கு கூடியிருந்த கிராமவாசிகள் அமைச்சரை முற்றுகையிட்டு, போட்டி நடத்தும் உரிமையை கிராம கமிட்டிக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்த கிராம மக்கள், அமைச்சரும் மாவட்ட நிர்வாகமும் ஒருபுறமாக முடிவெடுத்து செயல்படுகின்றனர் என கடுமையாக குற்றம்சாட்டினர்.