சென்னை விமான நிலையம் வழியாக நைஜீரியா செல்லும் அழகிய மயில் பீடம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நைஜீரியாவுக்கு அழகாக வடிவமைக்கப்பட்ட மயில் பீடம் மற்றும் சிவகாமி அம்பாள் சிலை ஆகியவை தேவையான சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
நைஜீரியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருப்பணி பணிகளின் போது, அங்கு இருந்த மயில் சிலை சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சுப்ரமணியம் என்ற பக்தர், கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட சிவகாமி அம்பாள் சிலை மற்றும் புதிய மயில் பீடத்தை வாங்கி, அனைத்து விதிமுறைகளையும் பூர்த்தி செய்து நைஜீரியாவுக்கு கொண்டு சென்றுள்ளார்.