சென்னையில் 10-வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்த 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை சிவானந்தா சாலையில் 10-வது நாளாக நடைபெற்ற போராட்டத்தின் போது, அங்கு திரண்ட ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, 10-வது நாள் போராட்டத்தில் பங்கேற்ற 650 இடைநிலை ஆசிரியர்கள் மீது மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை, இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.