100 நாள் வேலைத் திட்ட விவாத வேளையில் ராகுல் காந்தி எங்கு இருந்தார்? – சிவராஜ் சிங் சவுகான் கேள்வி
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட புதிய மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றார் என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில், 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களை 125 ஆக உயர்த்திய மத்திய அரசு, அந்த திட்டத்தின் பெயரையும் விபி–ஜி ராம் ஜி என மாற்றியமைத்தது.
இந்த மாற்றத்தை கண்டித்து, வரும் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 25 வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், விபி–ஜி ராம் ஜி மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது ராகுல் காந்தி அவையில் கலந்துகொள்ளவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், அந்த சட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதை காங்கிரஸ் கட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.