ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள்

Date:

ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் தயார் செய்யும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன. தமிழர்களின் வீரத்தையும் மரபையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எந்தவித பாரபட்சமும் இருக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அந்த விழாவின் முக்கிய அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேகமெடுத்து வருகின்றன.

கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் சேலத்தைச் சேர்ந்த ‘பாகுபலி’ காளை முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான போட்டிகளுக்காக காளைகளை உடல் மற்றும் மன ரீதியாக தயார்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கள்ளக்குறிச்சி, வாழப்பாடி, அயோத்திப்பட்டினம், வெள்ளாளகுண்டம், வீரபாண்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம் போன்ற பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் டோக்கன் வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாடுபிடி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரம்பரிய வீர விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்றும், போட்டிகள் முழுமையாக நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்றும் காளையர்களின் உரிமையாளர்களும், வீரர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

வீர விளையாட்டாக மட்டுமல்லாமல், தமிழகத்தின் அடையாளமாகவும், பழமையான பண்பாட்டு மரபாகவும் ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது. காளைகளின் வலிமையும், வீரர்களின் துணிவும் வெளிப்படும் இந்த பாரம்பரிய விளையாட்டில் எந்தவிதப் பாகுபாடும் இன்றி போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங்

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன...

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் : இந்தியாவை பாராட்டிய சீனா

ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் : இந்தியாவை பாராட்டிய...

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம்...

சென்னையில் ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்

சென்னையில் ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து...