உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!
மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையே நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லார் மற்றும் ஹில்கிரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில் பாதையில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்ததால், மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்ட மலை ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் உதகைக்கு செல்ல திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
தகவலறிந்த ரயில்வே துறை ஊழியர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, ரயில் பாதையில் விழுந்த மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றி, தண்டவாளங்களை சீரமைத்தனர். பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.