சென்னையில் போராட்டம் நடத்திய 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு
சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள், தங்களது ஊதிய கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ அலுவலக வளாகம் முன்பாக நேற்று தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆசிரியர்களை குழுக்களாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இதனையடுத்து, அனுமதி பெறாமல் கூடியது, பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 998 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கை, போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.