என்டிஏ கூட்டணி 220-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் – திண்டுக்கல் சீனிவாசன்
அதிமுகவும், பாஜகவும் இணைந்துள்ள கூட்டணிதான் மிக வலிமையான அரசியல் அமைப்பு என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக – பாஜக இணைந்த என்டிஏ கூட்டணி வருகிற தேர்தலில் 220-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார். மேலும், எந்த கட்சிகளின் ஆதரவும் இல்லாமலேயே அதிமுக தனித்து போட்டியிட்டாலும் 180-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.
நடிகர் விஜயை குறித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அவரைப் பார்த்து அச்சம் கொள்வது திமுகதான்; அதிமுகவுக்கு எந்த விதமான பயமும் இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் உண்மையான போட்டி திமுக மற்றும் தவெக இடையேதான் இருக்கும் என்றும், அந்தப் போட்டி முதலிடம் அல்ல, இரண்டாம் இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதற்காக மட்டுமே இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.