உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி – நயினார் நாகேந்திரன்
விவேகானந்தரின் வழியைப் பின்பற்றி தூய்மையும் ஒழுக்கமும் கொண்ட வாழ்க்கையை நடத்தி வருபவர் சி.பி. ராதாகிருஷ்ணன் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில், எம்ஜிஆர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே, எம்ஜிஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய நயினார் நாகேந்திரன், உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் தன்னைச் சுற்றி இருந்தவர்களை மறக்காத மனிதநேய குணம் கொண்டவர் சி.பி. ராதாகிருஷ்ணன் என புகழாரம் சூட்டினார்.
மேலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது நன்றியை அவர் தெரிவித்தார்.