புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடக்கம் – வேகமாக பாய்ந்த காளைகள்

Date:

புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடக்கம் – வேகமாக பாய்ந்த காளைகள்

2026ஆம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் உற்சாகமாக ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தச்சன்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள புனித விண்ணோற்ப தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.

ஏழு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், வாடிவாசல் வழியாக வேகமாக வெளியேறிய காளைகளை வீரர்கள் தைரியத்துடன் எதிர்கொண்டு திறமையாக அடக்கினர்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட 23 பேர் விடுதலை!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உட்பட...

சஹாரா பாலைவனத்தில் ‘காப்பான்’ பட பாணியில் வெட்டுக்கிளிப் படைத் தாக்குதல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி!

சஹாரா பாலைவனத்தில் 'காப்பான்' பட பாணியில் வெட்டுக்கிளிப் படைத் தாக்குதல்: வாகன...

“ஓபிஎஸ்-இன் திமுக சேர்க்கை அந்த கட்சிக்கே பாதகமாக அமையும்” – தமிழிசை சௌந்தரராஜன் கடும் விமர்சனம்!

"ஓபிஎஸ்-இன் திமுக சேர்க்கை அந்த கட்சிக்கே பாதகமாக அமையும்" - தமிழிசை...

கும்பகோணத்தில் அதிசயம்: 51 அடி உயர 65 டன் எடையுள்ள பஞ்சலோக அம்மன் சிலை சேலத்திற்குப் பயணம்!

கும்பகோணத்தில் அதிசயம்: 51 அடி உயர 65 டன் எடையுள்ள பஞ்சலோக...