இறை சக்தியை விட வலிமையானது எதுவும் இல்லை – குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்
உலகில் இறை சக்தியை மிஞ்சும் எந்தவொரு வலிமையும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக தமிழகம் வந்துள்ள குடியரசு துணைத் தலைவர், வேலூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீபுரம் பொன் கோயிலின் பீடாதிபதி சக்தி அம்மாவின் 50வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதே சக்தி அம்மாவின் எண்ணமும் கொள்கையும் என கூறினார். மேலும், ஆன்மிக சக்தியை யாராலும் எந்த சூழலிலும் அழிக்க இயலாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு, வேலூர் மாநகரம் முழுவதும் ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.