கன்யாகுமரி மாவட்ட பாரதிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம் – புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
கன்யாகுமரி: கன்யாகுமரி மாவட்ட பாரதிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், பார்வதிபுரத்தில் அமைந்துள்ள BMS மாவட்ட அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் புதிய மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்திற்கு BMS மாவட்ட தலைவர் திரு. M.S. மணிகண்டன் தலைமை தாங்கி, புதிய பொறுப்பாளர்களை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்து வைத்தார்.
இதன்படி,
- தலைவராக திரு. M. மணிகண்டன்
- துணைத் தலைவர்களாக திரு. D. தினேஷ்குமார், திரு. D. மணிகண்டன், திரு. C. கிருஷ்ணாதாஸ்
- பொதுச் செயலாளராக திரு. N. ஹரி
- இணைச் செயலாளர்களாக திரு. M. நாகராஜன், திரு. J.S. மணிகண்டன், திரு. T. ரமேஷ்
- பொருளாளராக திரு. K. ரசல்ராஜ்
- அமைப்பு செயலாளராக திரு. K. செந்தில்ஆறுமுகம்
மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில்,
மாவட்ட அமைப்புச் செயலாளர் திரு. G. முருகன், மாவட்ட செயலாளர் திரு. S. ராஜமணி, மாவட்ட பொருளாளர் திருமதி V.S. அஜிதா, TNSTC மாவட்ட பொதுச் செயலாளர் திரு. S. கீரிஷ் ஆகியோர் உரையாற்றினர்.
மேலும், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. K. முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் திரு. N. பிறைட் உள்ளிட்டோர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களான
திரு. B. சிதம்பரம் பிள்ளை, திரு. A. ஆண்டிபிள்ளை, திரு. M. தேவதாஸ், திரு. M. சுரேஷ், திருமதி S. இந்திரா, திரு. G. விஜய கோபாலன், திரு. S. நாரயணபிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு, பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினர்.